SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நன்மையை நாடி நிற்போம் தீமையைத் தேடாதிருப்போம்!

2019-03-12@ 16:17:37

‘‘யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, நாங்களும், பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? என்றார். அதற்கு  இயேசு அவர்களை நோக்கி, ‘‘மணவாளன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப்பிரிய  வேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில்,  அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும். கிழிசலும் பெரிதாகும்.  அதுபோல பழைய தோற்பையில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி  வைத்தால் தோற்பைகள் வெடிக்கும். மதுவும் சிந்திப்போகும். தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவை புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது  இரண்டும் வீணாய்ப் போகாது என்றார்.’’  (மத்தேயு 9: 1417)

நோன்பின் விளைவு செயலில் தென்பட வேண்டும். தன்னை ஒடுக்குவது, நாற்பது நாட்கள் தாடி வளர்ந்து முகத்தோற்றத்தை மாற்றி அமைத்து, சோகத்தை  வெளிப்படுத்துவது, மது அருந்தாமை, புகைபிடிக்காமை, மாமிசம் உண்ணாமை என குறுகிய காலத்திற்கு மட்டும் வெளிவேஷம் போட்டு அலைவது மட்டும்  நோன்பு ஆகாது. உண்மையான உணவு உடைகள் அளித்து உபசரித்து உதவிகள் புரிவது போன்ற நற்செயல்கள் புரிந்து தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.  உண்ணாமல் இருப்பது மட்டும் உண்மையான நோன்பு அல்ல. உண்மையான நோன்பின் நோக்கம் இறைவன் விரும்பும் அறச்செயல்களைச் செய்து  அவருடைய அன்பைப் பெறுவது ஆகும். இத்தவக்காலத்தில் நாங்கள் கடைப்பிடிக்கும் ஒறுத்தல் முயற்சிகளைக் கருணையுடன் ஏற்றருளும்.

இத்தவக்காலத்தில் எங்கள் உள்ளங்களை உமக்கு உகந்தவையாக எங்களைக் கட்டுப்படுத்தி வாழ ஆற்றல் அளிப்பீராக! ஆண்டவரே! உம் வழிகளை எமக்குக்  காட்டியருளும். உம் நெறிகளை எமக்குக் கற்பித்தருளும். இத்தவ நாட்களில் நாங்கள் பக்தி முயற்சிகளைக் கடைப்பிடித்து, பாவத்திற்கு பரிகாரம் புரிந்து  உண்மையான மனமாற்றம் பெற்று பிறரன்பு செயல்களில் ஈடுபட்டு உழைக்க எங்களுக்கு அருள்புரிவீராக! தவக்கால நோன்பு நாட்களில் பெரும்பாலும் தேவையற்ற  இச்சைக்குரிய எண்ணங்களைக் கொண்டு வருகின்ற தீயவற்றைத் தவிர்க்க வேண்டும். இயேசு எந்நாளும் நம்மோடு இருக்க இதைச்செய்ய நம்மால் முடியுமா?  இடைவிடாத ஜெபம், உறுதியான திடமனது, அசைக்க முடியாத மனஉறுதியோடு  கூட வாழ்வைப் புதுப்பிக்க முடியும். அவ்வேளையில் நேர்மையின் இவ்விடமாக  நம் இல்லங்கள் திகழட்டும். பொருளாசையை விலக்கி வாழ்வோம்.

உள்ளதே போதும் என்றிருப்போம். நன்மையை நாடி நிற்போம். தீமையைத் தேடாதிருப்போம். அப்பொழுது தான் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு இருப்பார். நம்முடைய தலைக்கு மேலாக பறவை பறக்குமானால் தீமையானது எதுவும் நமக்கு நேரிடாது, ஆனால் அது நமது தலையில் அமர்ந்து எச்சமிடுமானால், நம்  தலை முதல் உடம்பு முழுவதும் அசுத்தமாகி விடும். தான் படைத்த மனிதன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். பாவத்தால்  அடிமையாகிப் போன மனிதனை கைவிட்டுவிட விரும்பாத கடவுள் அவனைக் காக்க விரும்பியதையும், மீட்க விரும்பியதையும் அன்பு செய்ததையும், அருளைப்  பொழிந்ததையும், மறுபடியும் தன் இறை சாயலை அவனுள் புகுத்த விரும்பியதையும் தியானிக்க அழைக்கும் அருளின் தவம். இறை இரக்கத்தின் தவம். இந்த  அருந்தவத்தை நமது வாழ்வைப் பாதிக்கும் தடைகளான பாவநிலைகளை அறிந்து உடைத்தெறிவோம்.

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்