SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகிரியில் தவக்கால சிலுவைப் பயணம்

2019-03-11@ 15:27:49

சிவகிரி: சிவகிரி புனித லூர்து அன்னை ஆலயத்தில் தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு ஆராதனை மற்றும் சிலுவைப் பயணம் நடந்தது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் தொடங்கி இயேசு உயிர்தெழுகின்ற நாள் வரையிலான 40 நாட்களையும் தவக்காலமாக கருதி கிறிஸ்தவர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தாண்டு தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிவகிரியில் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிலுவைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இறைமக்கள் தங்கள் கரங்களில் மந்திரிக்கப்பட்ட சிலுவைகளை கையில் ஏந்தியபடி, பாடல்கள் பாடியாவாரே ஆலயத்தில் இருந்து கக்கன்ஜி வடக்குத்தெரு, அம்பேத்கர் நடுத்தெரு, பெரியார் கடைவீதி, செக்கடி முக்கு வழியாக புனித மதலேன் மரியாளின் குருசடிக்குச் சென்று விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழவும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று தேவிபட்டினம், வாசுதேவநல்லூர் தேவாலயங்களிலும் சிலுவைப்பயணம் நடந்தது.
ஏற்பாடுகளை சிவகிரி தேர்வுநிலை பங்குத்தந்தை சேவியர் செய்திருந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்