SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-03-08@ 17:09:38

மார்ச் 9, சனி  

திருவரங்கம் ஸ்ரீஎம்பெருமான் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமான் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் தீர்த்தவாரி. தையாறு ஸ்ரீ ரங்கநாத மகாதேசிகர் திருநட்சத்திரம்.

மார்ச் 10, ஞாயிறு   

சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.
கோயம்புத்தூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் பவனி.

மார்ச் 11, திங்கள்  

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தப்பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நாங்குநேரி ஸ்ரீவானமாமலைப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா உற்சவம் ஆரம்பம்.

மார்ச் 12, செவ்வாய்  

சஷ்டி விரதம். கிருத்திகை விரதம். வேலூர் மாவட்டம் ரத்னகிரி ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காட்சி. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு.

மார்ச் 13, புதன்  

குருபகவான் அதிசாரம்.(விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு) திருப்புவனம் ஸ்ரீஜெகந்நாதப்பெருமாள், பரமக்குடி அன்னை முத்தாலம்மன் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி. திருச்சிராப்பள்ளி ஸ்ரீதாயுமானவர் கற்பக விருக்ஷ வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா.

மார்ச் 14, வியாழன்  

காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் செங்கண்மால் விடபோத்சவம், திருக்கச்சி நம்பிகள். கழுகுமலை ஸ்ரீமுருகப்பெருமான் காலை புஷ்பக விமானத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி வரும் காட்சி. ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். நந்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருப்பூந்துருத்தி ஸ்ரீதீர்த்த நாராயணஸ்வாமிகள் ஆராதனை.

மார்ச் 15, வெள்ளி  

நவமி. காரடையான் நோன்பு.  ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் சிங்க வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆண்டாள் திருக்கோலம், யானை வாகனத்தில் திருவீதியுலா. மயிலாடுதுறை வள்ளலார் கோயில் 7 தின சூரிய பூஜை ஆரம்பம். திருவையாறு திருநந்தி தேவர் ஜனன உற்சவம்; இரவு பட்டாபிஷேகம், மயிலை ரிஷப வாகனம். வைத்தீஸ்வரர் கோயிலில் வேதபாராயணம். காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் தாயார் குளம் தெப்போற்சவம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-11-2019

  22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • watervapormoon

  வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

 • kuwaitcamelRace

  குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

 • amazonTraders

  Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

 • dubaiairshow2019

  துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்