SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்ப திருவிழா கோலாகலம்

2019-02-20@ 16:41:16

நெல்லை:  நெல்லையப்பர் கோயிலில் நேற்றிரவு அப்பர் பெருமான் தெப்பத் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முற்காலத்தில் சைவ, சமண மதத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தினர், சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் பக்தியை பரிசோதிக்கும் வகையில், அவரை கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்பர் பெருமான் சிவபெருமானை நினைத்து மனமுறுகி பாடினார். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதக்க துவங்கியது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் பெருமையை உலகிற்கு உணர்த்தி, கடவுளின் திருக்காட்சி பெற்றார்.

அப்பர் பெருமானின் வாழ்வில் நடந்த தெப்ப வரலாறு, பாடல் பெற்ற சைவ சமய தலமான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் நேற்றிரவு 7 மணிக்கு அம்மன் சன்னதி அருகிலுள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்