SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஆரத்தி பூஜை

2019-02-20@ 16:38:34

நெல்லை: புஷ்கர திருவிழாவை நினைவூட்டும் விதமாக நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம், தாமிர பரணி நதியில் நேற்றிரவு சிறப்பு ஆரத்தி வைபவம் நடந்தது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் பல பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை தாமிரபரணி புஷ்கர திருவிழா நடந்தது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவை நினைவு கூறும் வகையிலும், மாசி மகம் பவுர்ணமியை யொட்டியும் நேற்றிரவு நெல்லை தைப்பூச மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தாமிரபரணி நதியில் புனித நீர் மற்றும் பூக்களால் சிறப்பு வழிப்பாடும், சிறப்பு ஆரத்தியும் நடந்தது.

இதனையடுத்து நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சவுந்திரவல்லி அம்பாள் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் 108ம் சங்காபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதனையடுத்து சுவாமியும், அம்பாளும் சிவிகி வாகனத்தில் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்