SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்

2019-02-19@ 16:54:12

‘‘உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார். அவர் மாவீரர். மீட்பு அளிப்பவர். உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூறுவார். தம் அன்பினால் உனக்கு புத்துயிர் அளிப்பார். உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்கள். அது திருவிழாக் காலம் போல் இருக்கும். உன் துன்பத்தை அகற்றி விட்டேன். ஆகவே இனி நீ இழிவடைய மாட்டாய். இதோ! உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன். கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன். ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன். அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும், புகழும் பெறச் செய்வேன். உங்களை ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்.

ஆம். உங்கள் கண் முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும், புகழும் பெறுமாறு செய்வேன் என்கிறார் ஆண்டவர்.’’  (செப்பனியா 3: 1720) இல்லறம் நல்லதா? துறவறம் நல்லதா? இரண்டும் தான். ஆனால் ஒன்று, இல்லறத்தில் இருப்பவர்களுக்கு துறவறத்தின் பக்கமோ, துறவறத்தில் இருப்பவர்களுக்கு இல்லறத்தின் பக்கமோ பார்வை திரும்பக்கூடாது. அதுவே மிக மிக முக்கியம். இல்லற வாழ்க்கை பிடிக்கவில்லை. துறவற வாழ்க்கைக்குப் போய்விடலாம் என்று முடிவு செய்த ஒருவர் மகானை சந்திக்க முடிவு செய்தார். அங்கே மகான் இலைகளை ஈர்க்குச்சியால் தைத்து, ‘தையல் இலை’ தயாரித்துக் கொண்டிருந்தார். வந்தவர் தயங்கி நிற்பதைக் கண்ட மகான் பேச ஆரம்பித்தார்.

இதோ பார்! கஷ்டப்பட்டு இந்தத் தையல் இலைகளைச் செய்து பயன்படுத்துகிறோம். பயன்படுத்திய இலையைத் தூக்கி எறிந்து விடுகிறோம். இதைக் கேட்டதும், வந்தவருக்கு வேறு கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதால் வாயை மூடிக்கொண்டார். பிறகு யோசிக்க ஆரம்பித்தார்; உண்மைதான். நமது வாழ்க்கையும் ஒரு தையல் இலைதான். நமக்கென்று சில வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடிக்காமல் துயரங்களுக்குப் பயந்து வாழ்க்கையை விட்டு ஓடிப்போக முடியாது; குழப்பத்துடன் வந்தவர் தெளிவோடு ஊருக்குத் திரும்பி தன் குடும்பத்தைத் தேடி நடந்தார். அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்ய வழிகாட்டுவதே ஆன்மிகம். ஆனால், இன்று தமது கடமைகளில் இருந்து தப்பிக்க ஆன்மிகம் உதவுமா என்று அலைகிறவர்களே அதிகம்.

இல்லறக்கடமைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த ஒருவர் மனைவிக்கு உதவியாக வீட்டில் உள்ள கிழிந்த துணிமணிகளைத் தைத்துத் தரத் தீர்மானித்தார். முதலில் ஊசி ஒன்றைக் கையில் எடுத்தார். இன்னொரு கையில் நூலை எடுத்தவர் அதை ஊசியில் கோர்க்க முற்பட்டார். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அதனுடன் போராடிக்கொண்டிருந்தார். தற்செயலாக அந்தப்பக்கம் வந்த அவருடைய மனைவி அதைக் கவனித்துவிட்டு, ‘‘எவ்வளவு நேரம் போராடினாலும் உங்களால் ஊசியில் நூலைக் கோர்க்க முடியாது என்றார். ஏன்? நீங்கள் கையில் வைத்திருப்பது குண்டூசி!‘‘பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை. இருளில் நடப்பவனே இடறி விழுகிறான்!’’‘‘இருளில் நடப்பவனுக்கு, தான் எங்கே போவது என்பது தெரியாது.’’

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்