SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-02-15@ 17:26:08

பிப்ரவரி 16, சனி  

வைஷ்ணவ பீம ஏகாதசி. காங்கேயநல்லூர் முருகப் பெருமான் தேரோட்டம். காரமடை ஸ்ரீரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்டச்சேவை. காஞ்சி ஏகாம்பரநாதர் தவன தோட்ட உற்சவம். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீனிவாச நிகேதனம் ஸ்ரீமத் சீதாராம ஸ்வாமிகள் ஜெயந்தி.

பிப்ரவரி 17, ஞாயிறு  

பிரதோஷம். குலசேகராழ்வார். திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் பரி வேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீஅரங்கநாதர் திருக்கல்யாணம். குடந்தை ஆதி கும்பேஸ்வரர் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் தேரோட்டம்.

பிப்ரவரி 18, திங்கள்.

திருக்கடவூர் ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி அபிஷேகம்,  கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி வெண்ணெய்த் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம். மதுரை இன்மையில் நன்மை தருவார் தேரோட்டம். மாலை 6 மணிக்கு நடராஜர் அபிஷேகம். சென்னை திருவொற்றியூர் மகிழடி சேவை.

பிப்ரவரி 19, செவ்வாய்  

பெளர்ணமி. மாசி மகம். ஆ.கா.மா.வை. சமுத்திரஸ் நானம். கிருத கம்பளம் சாத்துதல். சென்னை சைதை காரணீஸ்வரர் வேடுவர் அலங்காரம். திருச்செந்தூர், பெருவயல், காரமடை ஆகிய தலங்களில் தேரோட்டம். திருக்கோஷ்டியூர் செளம்ய நாராயணப் பெருமாள், குடந்தை ஸ்ரீசார்ங்கபாணி இத்தலங்களில் தெப்போற்சவப் பெருவிழா. திருமோகூர் கஜேந்திர மோட்சம். மணக்கால் நம்பி திருநட்சத்திரம். ஸ்ரீதோத்திரபூர்ணாம்பிகா சமேத ஸ்ரீகாமதகன மூர்த்தி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு திருக்குவளை நெல் மகோற்சவம். கஞ்சனூர் சப்தஸ்தானம். காஞ்சி காமாட்சி காலை தீர்த்தவாரி. இரவு வெள்ளி ரதம். காஞ்சி கச்சபேஸ்வரர் ஐயங்குளம் திருவூறல் உற்சவம் காஞ்சி தேவராஜர் ராஜகுளம் தெப்பம்.

பிப்ரவரி 20, புதன்  

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவம்.

பிப்ரவரி 21, வியாழன்  

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் தவனோற்யசவம். செம்மங்குடி அகத்தீஸ்வரர் ஆலய சம்வத்ஸராபிஷேகம், திருவெண்காடு திருக்கல்யாணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. திருவள்ளுவ நாயனார் குருபூஜை. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.

பிப்ரவரி 22, வெள்ளி.

சங்கடஹரசதுர்த்தி. எறிபத்தர். வேளூர், திருவாரூர், திருவானைக்காவல் ஸ்ரீசந்திரசேகரர் உற்சவம், திருவெண்காடு 63 நாயன்மார். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தேரோட்டம். காரமடை ஸ்ரீரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்போற்சவம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்