SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்

2019-02-14@ 09:38:53

சாய்பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரீட்சையே தவிர மற்றபடி சாய்பாபா எப்போதும் தன் பக்தர்களை காத்து ரட்சிக்கும் ஒரு அற்புத சக்தியாகவே விளங்குகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்கும். எல்லாவித வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லவர் சாய்பாபா. பாபா ஒரு குரு, ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கி வாருங்கள்.

இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார்.

நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன் என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும். கர்மங்களை குறைத்துக் கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருந்தால் என் மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். கவலைப்படாமல் இரு. அப்பா நான் இருக்கிறேன், கோபம் வேண்டாம். என்னை தினம் தினம் நீ வழிபடும் அனைத்தையும் நான் ஏற்பேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. எவரும் எதையும் நாடமுடியாது. என் நாமத்தை உச்சரிக்கும் உன் மனம் தெளிவாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்