வைகுண்டவாச பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
2019-02-13@ 16:21:45

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி மகோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ரதசப்தமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 10.30 மணிக்கு சேஷ வாகனத்திலும், மதியம் 12.30 மணிக்கு கருட வாகனத்திலும், மாலை 4 மணிக்கு இந்திர விமான வாகனத்திலும், 5.30 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்திலும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து வைண்டவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
வத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது
மீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது
சேத்தூரில் பூக்குழி திருவிழா
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது