SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூரில் 5 வருடங்களுக்கு பின் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

2019-02-12@ 17:51:16

பெரம்பலூர்: பெரம்பலூரில் 5ஆண்டுகளுக்குபிறகு பிரம்மபுரீஸ்வரர் திருக் கோயில் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 19ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. பெரம்பலூரின் புகழ்பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேதபிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத் திருவிழா கடந்த 2013க்கு பிறகு 5ஆண்டுகளாக நடத்த படாமல் இருந்தது. இதனையடுத்து பெரம்பலூர் தர்மபரிபாலன சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் (ஸ்ரீரங்கம்) கல்யாணி, உதவிஆணையர்(அரியலூர்) தக்கார் முருகையா ஆகியோரது உத்தரவின்பேரில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 8ம்தேதி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர்   திருக் கோயில் வளாகத்தில் கோயில் செயல்அலுவலர் மணி தலைமையில் முகூர்த்தக்   கால் நடும்நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் திருத்தேரோட்ட விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை வெகுவிமரிசையாக நடந்தது. இதற்காக  வேதமந்திரங்கள் முழங்க, சிவலிங்கம், நந்திஉருவம் பொறித்த கொடி, கோயில் உட்பிரகாரத்தில் வலம் வரப்பட்டு, சுமார் 50அடிஉயர கொடிகம்பத்தில்  சுவாமிநாத  சிவாச்சாரியார், உதவிகுருக்கள் கவுரிசங்கர் ஆகியோரால் கோயில் செயல்அலுவலர் மணி முன்னிலையில் காலை 10.45மணிக்கு ஏற்றிவைக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என கோஷங் களை எழுப்பி  வழிபட்டனர்.  நிகழ்ச்சிகளில் தர்மபரிபாலன சங்கத்தின் செயலாளர்  பழனியாண்டி, மகேஸ்வ  ரன், முன்னால் அறங்காவலர் குழுத்தலைவர் கணேசன்,  முன்னால் அறங்கா வலர்  வைத்தீஸ்வரன், முக்கியப் பிரமுகர்களான பூபதி,  தர்மராஜ், கீத்துக்கடை குமார், பூக்கடை சரவணன் உள்ளிட்டோர் மற்றும்  திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து முதல்நாளான  நேற்று அன்னவாகனத்தில் சுவாதி திருவீதியுலா நடந்தது. இன்றிரவு சிம்மவாகனத்தில் சுவாமி திருவீதியுலா  நடக் கிறது. வருகிற 19ம்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்