SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசி மாத விசேஷங்கள்?

2019-02-12@ 16:37:20

மாசி 1, பிப்ரவரி 13, புதன்  

அஷ்டமி. கார்த்திகை விரதம். மதுரை ஸ்ரீகூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேஷ வாகனத்தில் பவனி. விஷ்ணுபதி புண்ணிய காலம். ராகு  கேது பெயர்ச்சி.

மாசி 2, பிப்ரவரி 14, வியாழன்  

நவமி. காஞ்சி ஸ்ரீவரதர் ஸ்ரீதேவராஜஸ்வாமி திருக்கோயில் தென்னேரி தெப்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

மாசி 3, பிப்ரவரி 15, வெள்ளி  

தசமி. ஸ்மார்த்த ஏகாதசி. காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோட்டம் ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் சிறப்பு ஆராதனை. மதுரை ஸ்ரீஇம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் புறப்பாடு கண்டருளல். திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரதத்திலும், இரவு வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி. திருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் சபா 81ம் ஆண்டு யக்ஞம் மாசி 3ம் தேதி வெள்ளி முதல் 13ம் தேதி திங்கள் வரை (15.2.2019 / 25.2.2019) திருவூடல் தெரு திருவண்ணாமலையில் நடைபெறும்.

மாசி 4, பிப்ரவரி 16, சனி  

துவாதசி. வைஷ்ணவ பீம ஏகாதசி. காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தேரோட்டம். காரமடை ஸ்ரீரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் உருகு சட்டச் சேவை. காஞ்சி ஏகாம்பரநாதர் தவனதோட்ட உற்சவம். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீனிவாச நிகேதனம் ஸ்ரீமத் சீதாராம ஸ்வாமிகள் ஜெயந்தி.

மாசி 5, பிப்ரவரி 17, ஞாயிறு  

திரயோதசி. பிரதோஷம். குலசேகராழ்வார். வராஹகல்பாதி. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் பரி வேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாணம். குடந்தை ஆதி கும்பேஸ்வரர் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமான் தேரோட்டம்.

மாசி 6, பிப்ரவரி 18, திங்கள்  

சதுர்த்தசி. திருக்கடவூர் ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி அபிஷேகம், திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் 18.2.2019 இரவு 11.53 முதல் 19.2.2019 இரவு 9.32 வரை. கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி வெண்ணெய்த் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம். மதுரை இன்மையில் நன்மை தருவார் தேரோட்டம். மாலை 6 மணிக்கு நடராஜர் அபிஷேகம். சென்னை திருவொற்றியூர் மகிழடி சேவை.

மாசி 7, பிப்ரவரி 19, செவ்வாய்  

பெளர்ணமி. மாசி மகம். ஆ.கா.மா.வை. சமுத்திர ஸ்நானம். கிருத கம்பளம் சாத்துதல். சென்னை சைதை காரணீஸ்வரர் வேடுவர் அலங்காரம். திருச்செந்தூர், பெருவயல், காரமடை ஆகிய தலங்களில் தேரோட்டம். திருக்கோஷ்டியூர் செளம்ய நாராயணப் பெருமாள், குடந்தை ஸ்ரீசாரங்கபாணி இத்தலங்களில் தெப்ப உற்சவப் பெருவிழா. திருமோகூர் கஜேந்திர மோட்சம். மணக்கால் நம்பி திருநட்சத்திரம். ஸ்ரீ தோத்திர பூர்ணாம்பிகா சமேத ஸ்ரீகாமதகன மூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு திருக்குவளை நெல் மகோற்சவம். கஞ்சனூர் சப்தஸ்தானம். காஞ்சி காமாட்சி காலை தீர்த்தவாரி. இரவு வெள்ளி ரதம். காஞ்சி கச்சபேஸ்வரர் ஐயங்குளம் திருவூறல் உற்சவம் காஞ்சி தேவராஜர் ராஜகுளம் தெப்பம்.

மாசி 8, பிப்ரவரி 20, புதன்  

பிரதமை. இஷ்டி காலம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவம்.

மாசி 9, பிப்ரவரி 21, வியாழன்  

துவிதியை. காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் தவன உற்சவம். செம்மங்குடி அகத்தீஸ்வரர் ஆலய சம்வத்சராபிஷேகம், திருவெண்காடு திருக்கல்யாணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. திருவள்ளுவ நாயனார் குருபூஜை. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.

மாசி 10, பிப்ரவரி 22, வெள்ளி  

திரிதியை. சங்கடஹரசதுர்த்தி. எறிபத்தர். வேளூர், திருவாரூர், திருவானைக்காவல் ஸ்ரீசந்திரசேகரர் உற்சவம், திருவெண்காடு 63வர். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தேரோட்டம். காரமடை ஸ்ரீரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

மாசி 11, பிப்ரவரி 23, சனி  

சதுர்த்தி. காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம். காரமடை ஸ்ரீரங்கநாதர் சாற்றுமுறை, குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

மாசி 12, பிப்ரவரி 24, ஞாயிறு  

பஞ்சமி. காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம். சூரிய வழிபாடு சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

மாசி 13, பிப்ரவரி 25, திங்கள்  

சஷ்டி. மாசி 13, 14, 15ம் தேதிகளில் திருக்கண்டியூரில் சூரிய பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் பிரம்மோற்சவ ஆரம்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் லட்ச தீபக் காட்சி. மெஹர்பாபா ஜெயந்தி.

மாசி 14, பிப்ரவரி 26, செவ்வாய்  

சப்தமி. அஷ்டகா. திருவெண்காடு தெப்பம். ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி வெள்ளி கற்பக ரிஷப வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆயிரம்நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ராமநாதபுரம் செட்டித் தெரு அன்னை முத்தாலம்மன் பவனி வரும் காட்சி.

மாசி 15, பிப்ரவரி 27, புதன்  

அஷ்டமி. அன்வஷ்டகா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

மாசி 16, பிப்ரவரி 28, வியாழன்  

நவமி. கோவை ஸ்ரீகோணியம்மன் கிளி வாகனத்தில் பவனி. திருக்கோகர்ணம் சிவபெருமான் திருவீதிவுலா. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரமேல் தரிசனம்.
 
மாசி 17, மார்ச் 1, வெள்ளி  

தசமி. காரியார். மாசி 17, 21ம் தேதிகளில் குன்றத்தூர் சேக்கிழார் சுவாமிகள் ஆலயத்தில் சூரிய பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. காளஹஸ்தி ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. காரிய நாயனார் குரு பூஜை.

மாசி 18, மார்ச் 2, சனி  

ஏகாதசி.  வேளூர் 3 தின சூரிய பூஜை ஆரம்பம். மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு கண்டருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் தங்க ரிஷப சேவை. திருவைகாவூர் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.

மாசி 19, மார்ச் 3, ஞாயிறு   

துவாதசி. பிரதோஷம். திருவோண விரதம். மாசி 19, 20, 21ம் தேதிகளில் மாலை கோனேரிராஜபுரம் ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயத்தில் சூரிய பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் முத்தங்கி சேவை. தங்கப் பல்லக்கில் பவனி.

மாசி 20, மார்ச் 4, திங்கள்  

திரயோதசி. மஹா சிவராத்திரி. சிரவண விரதம். சென்னை சுகப்பிரம்ம மஹரிஷி ஆசிரம தன்வந்திரி விழா. திருவண்ணாமலை ஹரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனசேவை. திருப்பனந்தாள் ஸ்ரீஅருணஜடேஸ்வர ஸ்வாமிக்கு 4ம் காலத்தில் தாழம்பூ சாத்துதல். சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். நுங்கம்பாக்கம் வைதீக சமாஜம் மஹாருத்ரம். பானூர் திரெளபதி தீமிதி உற்சவம்.

மாசி 21, மார்ச் 5, செவ்வாய்  

சதுர்த்தசி.  திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர், ராமேஸ்வரம் தலங்களில் சிவபெருமான் தேரோட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் திருக்கல்யாணம். ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.

மாசி 22, மார்ச் 6, புதன்  

சர்வ அமாவாசை. வாஸ்து (ந.நே.கா.10.06   10.42) கோச்செங்கட்சோழர். திருச்சேய்ஞ்ஞலூர் ஸ்ரீ சண்டேஸ்வர பட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் தேரோட்டம். ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் காலை இந்திர விமானத்திலும், இரவு தங்க ரிஷபவாகன சேவை.

மாசி 23, மார்ச் 7, வியாழன்  

பிரதமை. இஷ்டி காலம்.  செல்வமுத்துக்குமார சுவாமி திருவீதியுலா. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு எழுந்தருளல். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

மாசி 24, மார்ச் 8, வெள்ளி  

துவிதியை. சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.

மாசி 25, மார்ச் 9, சனி  

திரிதியை. திருவரங்கம் ஸ்ரீஎம்பெருமான் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் தீர்த்தவாரி. தையாறு ஸ்ரீரங்கநாத மகாதேசிகர் திருநட்சத்திரம்.

மாசி 26, மார்ச் 10, ஞாயிறு   

சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. கோயம்புத்தூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் பவனி.

மாசி 27, மார்ச் 11, திங்கள்  

பஞ்சமி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தப்பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நாங்குநேரி ஸ்ரீவானமாமலைப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா உற்சவம் ஆரம்பம்.

மாசி 28, மார்ச் 12, செவ்வாய்  

சஷ்டி. சஷ்டி விரதம். கிருத்திகை விரதம். வேலூர் மாவட்டம் ரத்னகிரி ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக் காட்சி. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப்பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு.

மாசி 29, மார்ச் 13, புதன்  

சப்தமி. குருபகவான் அதிசாரம்.(விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு) திருப்புவனம் ஸ்ரீஜெகந்நாதப்பெருமாள், பரமக்குடி அன்னை முத்தாலம்மன் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி. திருச்சிராமலை ஸ்ரீதாயுமானவர் கற்பக விருக்ஷ வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா.

மாசி 30, மார்ச் 14, வியாழன்  


அஷ்டமி. காரடையான் நோன்பு, காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் செங்கண்மால் விடபோத்சவம், திருக்கச்சி நம்பிகள். கழுகுமலை ஸ்ரீமுருகப்பெருமான் காலை புஷ்பக விமானத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி வரும் காட்சி. ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். நந்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருப்பூந்துருத்தி ஸ்ரீதீர்த்தநாராயணஸ்வாமிகள் ஆராதனை.

தொகுப்பு: ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்