SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவக்கிரக தோஷம் போக்கும் அம்பை கிருஷ்ணன் கோயில்

2019-02-12@ 09:49:53

நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் அம்பை நுழைவு வாயில் அருகே 500 ஆண்டுகள் பழமையான நவக்கிரக தோஷம் போக்கும் கிருஷ்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் சேர மன்னன் திருமாலுக்கு கோயில் கட்ட விரும்பினான். அப்போது மன்னனின் கனவில் ருக்மணி, சத்யபாமாவுடன் மகாவிஷ்ணு புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலராக காட்சியளித்தார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள புன்னை வனத்தில் தனக்கு கோயில் கட்டும்படி மன்னனிடம் தெரிவித்தார். இதையடுத்து மன்னன் அந்த இடத்தில் கோயிலை கட்டி முடித்தான். இக்கோயில் மூலவர் வேணுகோபாலர் திருமேனி நேபாளம் கண்டகி நதியில் காணப்படும் சாளக்கிராமத்தால் ஆனது. வேணுகோபாலர் ஆதிசேஷனை குடையாகவும், ருக்மணி, சத்யபாமா சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார். சுவாமிக்கு எண்ணெய் காப்பு, பால் திருமஞ்சனம் நடைபெறும்.

இங்குள்ள உற்சவர் எப்போதும் தமது நாச்சியார்களை பிரிவதில்லை. வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசலை கடக்கும்போதும் சுவாமி தாயார்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் நித்ய கல்யாணப் பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இக்கோயிலில் நவக்கிரக தோஷங்களை போக்கும் மூர்த்தியாக சுவாமி விளங்குகிறார். சனிக்கிழமைகளில் சுவாமிக்கு எள் சாதம் படைக்கப்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமை பாசிபயறு சாதம் படைத்து வழிபாடு நடைபெறும். வைகாசி பிரமோற்சவத்தின் போது 5 கருட சேவை நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தி அன்று சுவாமிக்கு சங்குபால் தரும் வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு நெல் பிரசாதமாக வழங்கப்படும்.

இதனை அரிசியுடன் கலந்து வைத்தால் அன்னத்திற்கு பஞ்சம் வராது என்பது ஐதீகமாகும். இக்கோயிலின் வடபுறம் பாவம் போக்கும் ஹரிஹர தீர்த்த குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. புன்னை மரம் தலவிருட்சமாக விளங்குகிறது. பாஞ்சராத்திர ஆகமம் பின்பற்றப்படுகிறது. வைகாசி விசாகம், கிருஷ்ணஜெயந்தி, ஆடிசுவாதி, வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்கள் நடக்கிறது. தினமும் அதிகாலை 5.40க்கு விஸ்வரூபம், காலை 9க்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30க்கு சாயரட்சை, இரவு 8.15க்கு திருவிசாகம் பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு நெல்லை, தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு செல்ல பஸ் மற்றும் ரயில் வசதி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்