SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணத் தடை நீக்குவார் திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர்

2019-02-11@ 09:39:29

சென்னை ஆவடியை அடுத்த வட திருமுல்லைவாயலில் 1800 ஆண்டு பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதி காடாக இருந்தது. அப்போது இங்கிருந்த வாணன், ஓணன் என்ற 2 அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை எதிர்த்து போர் செய்ய வந்த தொண்டைமான் என்ற அரசனை அசுரர்கள் கொல்ல முயன்றனர். இதனால் அச்சம் அடைந்த மன்னன் பட்டத்து யானை மீதேறி தப்பி சென்று கொண்டிருந்தான். அப்போது யானையின் கால் அங்கிருந்த முல்லை கொடியில் சிக்கி கொண்டது. அதனை அரசன் வெட்டினான். வெட்டிய இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சி அடைந்த மன்னன் கீழே இறங்கி பார்த்த போது, மண்ணில் புதைத்திருந்த சிவ லிங்கத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் மனம் உடைந்த மன்னன் உயிரை மாய்க்க முயன்றான். அதற்குள் சிவ பெருமான் தோன்றி மன்னனுக்கு அருட் பாலித்தார்.

நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும் படி செய்தார். சிவன் தன்னை மாசில்லாதவன் என கூறியதால் இறைவனுக்கு மாசிலாமணீஸ்வரர் என மன்னன் பெயர் சூட்டினார். மேலும், அசுரர்கள் வைத்திருந்த 2 வெள்ளெருக்கம் தூண்களை கொண்டு வந்து மன்னன் கோயில் கட்டினான் என வரலாறு எடுத்துரைக்கிறது. இந்த தூண்கள் இன்றும் கோயிலில் இருக்கின்றன. கோயிலுக்குள் நுழைந்தவுடன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் மாசிலாமணீஸ்வரர். லிங்கத்தின் மேல் பகுதியில் வெட்டுப்பட்ட தடம் உள்ளது. கொடி போன்ற இடை கொண்டதால் இங்குள்ள அம்பாள் கொடியிடை நாயகி என அழைக்கப்படுகிறாள். ஆலய பிராகாரத்தில் சோழபுரீஸ்வரர், லவகுசர்கள் வணங்கிய குசல்புரீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோருக்கு சந்நதிகள் உள்ளன. வலம்புரி விநாயகரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீராடி, இக்கோயில் வீற்றிருக்கும் மாசிலாமணீஸ்வரரை வணங்கினால் பாவங்கள் நீங்கும். இங்குள்ள நந்திக்கு பூஜை செய்த மாலையை அணிந்து கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் வைகாசி மாதம் பிரமோற்சவம், ஆனியில் வசந்த உற்சவம், மாசி மாதத்தில் தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன. அம்மனை குளிர்விக்கும் வகையில் தினமும் அம்மனுக்கு சந்தன காப்பு செய்யப்படுகிறது. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்றும், மறுநாளும் நிஜ மேனியுடன் இந்த அம்மன் அருட் பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் காலை 6.30 மணி முதல் நண்பகல் 12 வரைக்கும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் நடை திறந்திருக்கும்.

எதிர் திசையில் நந்தி

இந்த ஆலயத்தில் வீற்றிருகும் நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னன் தொண்டைமானுக்கு துணையாக சென்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நந்தி சுவாமியை பார்த்த படி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பிய படி உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் நவகிரக சந்நதி இக்கோயிலில் இல்லை. சூரியனுக்கு மட்டும் சந்நதி அமைந்துள்ளது.

- பேராசிரியர் நாராயணீ மாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்