SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரவாசுதேவ பெருமாள் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

2019-02-08@ 17:47:51

தர்மபுரி: தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று காலை 10 மணிக்கு சாலை விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக சாலை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

யானை, குதிரைகள் பங்கேற்க செண்டை மேளம், மங்கள வாத்தியம், பஞ்சவாத்தியத்துடன் தீர்த்தக்குட ஊர்வலம், கடைவீதி வழியாக கோயிலை சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. மாலை 6 மணிக்கு வாஸ்து ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை கோயில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் மற்றும் பரவாசுதேவ பெருமாள் கோயில் பணியாளர்கள், கும்பாபிஷேக விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்