திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயிலில் மாசித்தேரோட்டம் கோலாகலம்
2019-02-08@ 17:47:24

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உப கோயிலான வெயிலுகந்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான மாசித் திருவிழா கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. விழாவின் முத்தாய்ப்பான தேரோட்டை வைபவம் நேற்று (7ம் தேதி) கோலாகலமாக நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி தீபாராதனையானதும் காலை 5.50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாகப் பங்கேற்ற பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர். தேரோட்ட விழாவில் திருக்கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், சிவன் கோயில் மணியம், தமிழரசன், உதவிப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், உதவியாளர் பிச்சையா, ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியன், சுபேதார் வடிவேல் மற்றும் அலுவலர் நெல்லையப்பன், குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் : பக்தர்கள் புனித நீராடினர்
திருக்காளாத்தீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
காரைக்கால் மண்டபத்தூர் கடற்கரையில் 12 ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி
பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் மாசி மகத்தையொட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி
பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
சுரண்டை அருகே வேலப்பநாடாரூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்