SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவந்தான் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2019-02-07@ 14:24:02

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருமால்நத்தம் கிராமத்தில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த 4ம் தேதி ரகுராம் பட்டர் தலைமையில் கணபதி ஹோமத்துடன் முதல்கால யாக பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜைகள் முடிந்து, நேற்று நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னர் காலை 9.35 மணியளவில் கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வந்தனர்.வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் “கோவிந்தா” என பக்தி கோஷமிட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்