SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்ரகாளியம்மன் கோயில் தீமிதி விழா

2019-02-07@ 14:23:30

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மேட்டுக்காடு பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று நடந்த தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் அருகே, மேட்டுக்காடு பத்ரகாளியம்மன் கோயிலில், தைத்திருவிழா கடந்த 5ம் தேதி பால்குட ஊர்வலத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று அதிகாலை 5 மணி முதல் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் எடுத்தும் வந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 3 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், கோயிலில் எருமை கிடாக்கள் பலியிடப்பட்டன. விழாவில் இன்று(7ம் தேதி) இரவு 8 மணிக்கு சத்தாபரணம் மற்றும் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்