SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடுவூர் கோதண்டராமர் சுவாமி கோயிலில் தை மாத தீர்த்தவாரி

2019-02-05@ 14:58:14

மன்னார்குடி: வடுவூர் கோதண்டராமர் சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மன்னார்குடிக்கு அடுத்த வடுவூரில் உள்ள கோதண்டராமர் ராமர் கோயிலில் வருடம் தோறும் தை அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு  தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற் றது. தை அமாவாசையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோயிலிருந்து தீர்த்த பேரர் சுவாமியை பல்லக்கில் எழுந்தருளச் செய்து வேத மந்திரங்கள் முழங்க புண்ணியத் குளமான சரயூ குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அங்கு தீர்த்த பேரருக்கு அபிசேகம் செய்தனர். நிறைவாக தீர்த்த பேரர் சுவாமியை தலையில் சுமந்தபடி தீட்சிதர்கள் சரயூ குளத்தின் நீரில் மூழ்கி எழுந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை கோயிலில் நடை பெற்ற விழாவில் கோதண்டராமர் ராமர் கோயில் சன்னதியில் சீதாதேவி, லட்சுமணன் உற்சவர் கோதண்டராமர் வில்லேந்திய திருக் கோலத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்