SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண வரம் தரும் ஆலயங்கள் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

சென்னை-பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலுள்ள நந்தீஸ்வரர் ஆலயத்தில் நந்தியம்பெருமானுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள்  இரு ரோஜா மாலைகளை வாங்கி சாத்தினால் திருமணத் தடை நீங்கிவிடுகிறது.

சென்னை-செங்கல்பட்டு வழியில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் நரசிம்மர் த்ரிநேத்ரதாரியாய் அருள்கிறார். அந்த மூன்றாவது  கண்ணை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா தடைகளும் விலகி, திருமணம் கைகூடுகிறது.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் உள்ள சந்தோஷி மாதாவை வெள்ளிக்கிழமைகளில் தரிசித் தால் திருமண வரம் பெறலாம்.

சென்னை-மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் உள்ள மயூரவல்லித் தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வதளங்களால்  ஸ்ரீஸூக்த அர்ச்சனை செய்தால் உடனே திருமணம் நடைபெறுகிறது.

தாம்பரம்-காஞ்சிபுரம் பாதையில் உள்ள முடிச்சூர் பிரம்மவித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகை யின் சந்நதியில் கட்டி பிரார்த்தனை செய்தால் தடைநீங்கி திருமணம் நடக்கிறது.

மயிலாடுதுறை-கீழையூர் கடைமுடிநாதர் ஆலய அபிராமி அம்மனுக்கு மஞ்சள் கயிற்றில் கோத்த மஞ்சள் தாலியை அணிவித்து,  அதை பிரசாதமாகப் பெற்று கன்னிப் பெண்கள் அணிந்து, பிறகு கழற்றி வீட்டில் வைத்து பூஜை செய்ய விரைவில் அவர்கள் மணமுடிக்கிறார்கள்.

திருமண தோஷம் உள்ளவர்கள் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றில் நீராடி, கடலில் குளித்து செந்தூரானை வணங்கி, குகை லிங்கத் தை தரிசித்தால் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகிறது.

ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதரையும் சுயம்பு பாணலிங்கத்தையும் வணங்கினால் திருமணத்திற்கு தடை குறுக்கிடாது.

மதுரை-சோழவந்தான் பாதையில் உள்ள திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்திலுள்ள 16 கர வனதுர்க்கைக்கு பூமாலை அணிவித்து,  அதை பிரசாதமாகப் பெற்று அணிந்து, பின் வீட்டில் வைத்து பூஜித்துவர விரைவில் கெட்டி மேளம் கொட்டும்.

தெய்வானைக்கும் முருகனுக்கும் திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் கோயிலை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபட,  திருமணம் நிச்சயம்.

கோபிசெட்டிப்பாளையம் முருகன்புதூரில் அருளாட்சி செய்யும் ஸ்ரீதேவிகருமாரியம்மன் திருமண வரம் அருள்கிறாள்.

திருமணஞ்சேரியில் அருளும் உத்வாக நாதரையும் கோகிலாம்பிகையையும் வழிபட்டு அத்தல கல்யாணசுந்தரருக்கு மாலை சாத்தி  வழிபட, விரைவில் மணமாலை சூடலாம்.

திருமண தோஷம் உள்ளவர்கள் திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி கோயிலில் கல்வாழை மரத்திற்கு தாலி கட்டி 12 முறை வலம்  வந்து பரிகார பூஜை செய்தால் 3 மாதங்களுக்குள் மங்கல நாண் கழுத்தை அலங்கரிக்கும்.

கடலூர், நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் போகிப் பண்டிகையன்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலையைப் பிர சாதமாகப் பெறும் கன்னியர் சீக்கிரமே திருமணம் முடிக்கிறார்கள்.

கும்பகோணம் ஒப்பிலியப்பன், மார்க்கண்டேய முனிவரின் மகளாகப் பிறந்த பூமிதேவியை மணம் புரிந்ததால் இவர் திருமண வரம்  அருள்வதில் நிகரற்றவர்.  

பிருகு மகரிஷியின் மகளான கோமளவல்லியை சார்ங்கபாணியாக பெருமாள் மணந்த தலம் கும்பகோணத்தில் உள்ளது. இவ்விருவ ரும் திருமண
வரமருளும் தயாபரர்கள்.

மேதாவி மகரிஷியின் மகளான வஞ்சுளவல்லியை, நம்பியாக பெருமாள் தன் ஐந்து வியூக சக்திகளுடன் கல் கருடனின் துணையோடு  திருமணம் புரிந்த தலம் நாச்சியார் கோயில். இந்த தம்பதி, பக்தர்களுக்குக் கல்யாண மாலை அணியும் பாக்கியம் நல்குகிறார்கள்.  

நந்த சோழனின் மகளான கமலவல்லியாக மகாலட்சுமி பிறந்து, அரங்கனை உறையூரில் மணம் புரிந்தாள். இந்த அன்னையை  வேண்டிக்கொண்டால் திருமண அழைப்பிதழை உடனே அச்சடிக்கலாம்.

கன்னியாகுமரிக்கு அருகே, வேளிமலை குமார கோயில், வள்ளியை முருகன் கரம் பிடித்த தலமாகும். இந்த வள்ளியும் முருகனும் தம் பக்தர்களின் திருமணத்திற்கும் அதற்குப் பிறகும்  காதல் வாடாதிருக்க அருள்கிறார்கள்.

ஆகாசராஜனின் புதல்வியாக பிறந்த பத்மாவதியை ஸ்ரீநிவாசன், திருமலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் மட்டுமல்லாமல் பிற எல்லா வரங்களையெல்லாம் வாரி வழங்கும் கரு ணாமூர்த்தி இந்த ஸ்ரீநிவாசன்.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்