SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய் நீக்கும் தலங்கள் எவை?

2019-01-29@ 15:25:48

வைத்தீஸ்வரன் கோயில்: கும்பகோணம் அருகில் உள்ள மிக பிரசித்தி பெற்ற ஸ்தலம். இது செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலமாகும். இறைவன் வைத்தியநாதனாக அருள்புரிகிறார். அம்பாள் பெயர் தையல் நாயகி. ரத்த சம்பந்தமான குறைபாடுகள், விபத்தினால் ஏற்பட்ட காயங்கள், முறிந்த எலும்பு நல்லபடி மீண்டும் கூட அறுவை சிகிச்சை சீராக அமைய இங்கு வந்து வழிபடலாம்.

மருந்தீஸ்வரர்: சென்னை திருவான்மியூரில் இக்கோயில் உள்ளது. இது ஓர் சர்வ ரோக நிவாரண ஸ்தலமாகும்.

வீரராகவர்: திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் சகல வியாதிகளுக்கும் பரிகார ஸ்தலம். அமாவாசையில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்யலாம். இங்குள்ள குளத்தில் வெல்லம் கரைக்க வியாதிகள் கரைந்து போகும்.

சுக்கிரேஸ்வரர்: சென்னை மயிலாப்பூர் வெள்ளீச்சரம் என்ற சிவஸ்தலம். இது சுக்கிர பரிகார ஸ்தலமாகும். கண் நோய் நீக்கி அருளும் ஸ்தலம். கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இங்கு வழிபட கண் பார்வை சீராகும். மேலும் சுக்கிர தோஷம் போக்கி திருமண வரம் அருளும் ஸ்தலம்.

மரகதலிங்கம்: திருப்போரூர், செங்கல்பட்டு மார்க்கத்தில் திருவடி சூலம் என்ற பழம்பெரும் ஆலயம் உள்ளது. இது ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்குள்ள லிங்கம் மரகதக் கல்லினால் ஆனது. இது சகல வயிற்று உபாதைகளையும் நீக்கும் ஸ்தலம். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்த பாலை அருந்த நோய் நீங்கும் கர்ப்பரட்சாம்பிகை: கும்பகோணம் அருகில் உள்ள திருக்கருகாவூர் ஆலயம் ரோக நிவாரண ஸ்தலம். குழந்தை பாக்கியம் தரும் ஸ்தலம். கர்ப்பிணிகள் இங்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொள்ள சுகப்பிரசவம் உண்டாகும். இத்தலத்து லிங்கத்தில் புனுகு பூசி வழிபடுவார்கள். இதற்கு புனுகு சட்டம் என்று பெயர். இந்த வழிபாடு அனைத்து தோல் நோய்களையும் நீக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்