SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலையில் நடராஜ பெருமானை தலையில் சுமந்து கிரிவலம் வந்த அடியார்கள்

2019-01-28@ 16:55:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடராஜ பெருமானையும், திருமுறைகளையும் தலையில் சுமந்து கொண்டு சிவன் அடியார்கள் கிரிவலம் சென்றனர். இந்து கோயில்களை சுத்தம் செய்யும் இறைபணி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் 9ம் ஆண்டு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நேற்று காலை நடந்தது. பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். தி.சரவணன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி முன்பிருந்து திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க கிரிவலம் புறப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான சிவன் அடியார்கள் கலந்து கொண்டனர். அப்போது, நடராஜ பெருமானையும் பன்னிரு திருமுறை நூல்களையும் தலையில் சுமந்து 14 கிலோ மீட்டர் தூரம் மலையை அவர்கள் வலம் வந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்