SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரியன் இறைவனின் அத்தாட்சி

2019-01-25@ 14:11:12

இயற்கையின் பிரமாண்டத்தைப் பார்த்து மனிதன் திகைப்பதும் பிறகு அந்த ‘பிரம்மாண்ட படைப்புதான் இறைவன்’ என்று கருதி வழிபடுவதும் மனித வரலாற்றில் காணப்படும் செய்திதான். இறைத்தூதர் இப்ராஹீம் அவர்கள், தம்மைப் படைத்த இறைவன் யாராக இருக்க முடியும் என்று பகுத்தறிவு அடிப்படையில் ஓர் ஆய்வை மேற்கொண்ட போது சூரியன் குறித்து இவ்வாறு கூறினார்:“...பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது, இதுதான் என்னுடைய இறைவன். இது எல்லாவற்றையும் விட மிகப்பெரியது” என்று வியந்து கூறினார்.(குர்ஆன் 6:78) ஆனால் அவருடைய அந்த வியப்பு நீடிக்கவில்லை. மாலையில் சூரியன் மறைவதைக் கண்டதும் கூறினார்.

“மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவன் அல்லன்” என்றவர் தொடர்ந்து தம் நிலையைப் பின்வருமாறு பிரகடனப்படுத்தினார்: அதுவும் (சூரியனும்) மறைந்துபோகவே,“என் சமூகத் தவரே, நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகிவிட்டேன். வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒரு மனத்துடன் நான் திரும்பிவிட்டேன். மேலும் ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் அல்லன்’ என்று கூறினார். (குர்ஆன் 6:79) இயற்கையின் பிரமாண்ட படைப்புகள் ஒருபோதும் இறைவனாக முடியாது என்று இறைத்தூதர்கள் பிரகடனம் செய்து, அந்த உண்மையைத் தங்களின் சமுதாயத்தார்களுக்கும் உணர்த்தினர்.

இயற்கையில் காணப்படும் பொருட்கள் யாவும் அவை ஆர்ப்பரிக்கும் பெரும் கடல்களானாலும் சரி, வானளாவ உயர்ந்து நிற்கும் மலைகளானாலும் சரி, தகதகவென்று ஒளிரும் சூரியனாக இருந்தாலும் சரி, சில்லென்ற குளிர்நிலவாக இருந்தாலும் சரி இறைவனின் படைப்புகள்தாமே தவிர இறைவன் அல்ல என்பதே இஸ்லாம் கூறும் வழிமுறையாகும்.“படைக்கப்பட்ட இயற்கைப் பொருட்களுக்கு நீங்கள் சிரம் பணியாதீர்கள். இந்தப் பொருட்களை இத்தனை வல்லமையுடனும் அறிவுநுட்பத்துடனும் படைத்த இறைவனுக்கே அடிபணியுங்கள்” என்பதே வேதத்தின் அழைப்பாகும். திருவேதம் கூறுகிறது:“இந்த இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் இறைவனின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள்.” (குர்ஆன் 41:37) படைப்புகள் அனைத்தையும் படைத்த வல்ல இறைவனையே வணங்கி வாழ்வோம்.
    
சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

 • holifestivel

  வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்