SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருமாள் கோதை நாச்சியாருக்கு திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

2019-01-25@ 13:07:35

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கோதை நாச்சியார் தைலக்காப்பு, திருக்கல்யாண உற்சவத்தையொட்டி ஜன.19ம் தேதி மாலை ஸ்ரீஆண்டாள் பெரிய சன்னதி எழுந்தருளலும், இரவு ஸ்ரீபெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெற்றது. ஜன.20ல் ஸ்ரீஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தைலம் திருவீதி சுற்றுதலும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தைலம் சாத்துதல், ஸ்ரீஆண்டாளுக்கு நவகலஸ அலங்கார சவுரி திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு திருவீதி புறப்பாடு நடந்தது. ஜன.21ல் ஸ்ரீஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தைலம் திருவீதி சுற்றுதலும் நடைபெற்றது.

தொடர்ந்து தைலம் சாத்துதல், தொடர்ச்சியாக ஸ்ரீஆண்டாளுக்கு நவகலஸ அலங்கார சவுரி திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை ஸ்ரீஆண்டாள் உச்சிக்கொண்டை சேவையும், மணவாளமாமுனிகள் கைத்தலத்தில் எழுந்தருளி ஸ்ரீ கோதை நாச்சியாரைக் கடாஷித்தலும் நடைபெற்றது. 4ம் நாளான ஜன.22ல் மாலை ஸ்ரீஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் நடைபெற்றது. ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் ஜன.23ல் காலை ஸ்ரீபெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளல், பெரியாழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீஆண்டாள் அங்குமணித் திருவீதிப்புறப்பாடு திருக்கல்யாண சீர்வரிசை மங்கள பொருட்களுடன் திருவீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து ஊஞ்சல் மாலை மாற்றுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாளும், ஆண்டாள் நாச்சியாரும் சேர்த்தியாய் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளினர். பின்னர் பட்டாட்சியர்கள் வேத மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கும், கோதை நாச்சியாருக்கும் இரவு 7.50 மணியளவில் திருமாங்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திருக்கோஷ்டியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பகதர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்