SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவந்தான் அருகே சுந்தரராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

2019-01-24@ 14:46:40

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அக்ரஹாரத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தின் வடக்கு பகுதியில் சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட புதிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுந்தரராஜப் பெருமாள், சுந்தர வள்ளி தாயார், வீரஆஞ்சநேயர், கிருஷ்ணர், பைரவர், கருடாழ்வார் ஆகிய ஆறு சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்பு பூஜை பாலாஜி பட்டர் தலைமையில் ஜன.21ம் தேதி துவங்கியது.

வேதபாராயணம் உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று காலை யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வந்து சுவாமி சிலைகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர். சைவமும், வைணவமும் இணைந்ததுபோல் சிவன் சன்னதி அருகில் பெருமாள் சன்னதியும் அமைந்துள்ளதால் காசிக்கு சென்று வரும் பலனை இங்கு வந்து தரிசித்தால் பெறலாம் என ஆன்மீக பெரியோர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்