SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமாரசாமிபேட்டையில் விநாயகர் தேரோட்டம்

2019-01-23@ 14:26:16

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு விநாயகர் தேரோட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி துவங்கியது. 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 21ம் தேதி காலை ஏராளமான பெண்கள் பங்கேற்ற பால்குடம் ஊர்வலமும், இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று 22ம் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் நடக்கிறது.

இதையொட்டி விநாயகர் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை 7 மணியளவில் விநாயகர் தேரோட்டம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான இன்று 23ம் தேதி காலை 6 மணிக்கு பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு வாணவேடிக்கையுடன் வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட மகாரத தேரோட்டமும் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்