SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடி சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா

2019-01-23@ 14:23:59

மன்னார்குடி: சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மன்னார்குடிக்கு அடுத்துள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தை மாதத்தில் மகம் நட்சத்திரம் தினத்தன்று தெப்பத்திருவிழா  நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது .கோயிலிலிருந்து பூமி, நீலா தாயார்கள் சமேதராக புறப்பட்ட சீனிவாசப் பெரு மாள் சேரன்குளம் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.

அதனை தொடர்ந்து கோயிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் கட்டப் பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார்.பெருமாளுக்கு விஷேச தீபாராதனைகள் நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, பின்னர் வான வேடிக்கைகள் முழங்க தெப்போற்சவம் நடைபெற்றது. இரவு துவங்கி நேற்று அதிகாலை வரை குளத்தில் மூன்று முறை வலம் வந்து தெப்பத்தில் இருந்து அருள்பாலித்த சீனிவாச பெருமாளை குளத்தின் கரைகளில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்