SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னிமலை தைப்பூச தேர் நிலை அடைந்தது : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

2019-01-23@ 14:23:21

சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் வந்து அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று மாலை மாலை 5 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. இன்று (23ம் தேதி) இரவு 7 மணிக்கு பரிவேட்டை  குதிரை வாகனக்காட்சியும், இரவு 9 மணிக்கு மதுரை முத்து வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றமும் நடக்கிறது. 24ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்தேர் விடப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு சென்னிமலை “செங்குந்தர் கைக்கோள முதலியார் இளைஞர் நற்பணி” மன்றம் வழங்கும்  “பக்தி இன்னிசை” நிகழ்ச்சியும் நடக்கிறது. தைத்தேர் திருவிழாவின் முக்கிய விழாவான 25ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணிக்குள் கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்மிகு வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.  அன்று இரவு 7 மணிக்கு முக்கிய நிகழ்வான  மகா தரிசனம் நடக்கிறது. அப்போது அருள்மிகு நடராஜப்பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா காட்சி நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்