SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தை மாத விசேஷங்கள்?

2019-01-14@ 14:40:31

தை 1, ஜனவரி 15,  செவ்வாய்  

நவமி. கரிநாள். பொங்கல் பண்டிகை.  உத்தராயண புண்யகாலம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நின்ற திருக்கோலம். சபரிமலை மகரஜோதி தரிசனம். தஞ்சாவூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சங்கராந்தி.

தை 2, ஜனவரி 16, புதன்  

தசமி. மாட்டுப் பொங்கல், தை கிருத்திகை. கரிநாள். கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் சிறிய வைரத்தேரில் தேரோட்டம். திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில், திருச்சி அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீ நம்பெருமாள் கோயில்களில் கனு திருநாள். வேளூர் கிருத்திகை.

தை 3, ஜனவரி 17, வியாழன்  

ஏகாதசி. சுக்லபட்ச சர்வ ஏகாதசி. கரிநாள். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் ராமாவதாரம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெற்போற்சவம். காணும் பொங்கல், பீஷ்ம ஏகாதசி.

தை 4, ஜனவரி 18, வெள்ளி  

துவாதசி. பிரதோஷம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் சிவகங்கை தெப்பம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேரோட்டம். கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் திருவீதியுலா. கண்ணப்ப நாயனார் குருபூஜை. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் காலை எடுப்புத்தேர், இரவு சப்தாவரணம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி வரும் காட்சி. திருவையாறு ஸ்ரீஅம்பாளுக்கு சந்தனக் காப்பு, நவசக்தி அர்ச்சனை.  

தை 5, ஜனவரி 19, சனி  

திரயோதசி. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி.  தடுத்தாட்கொண்டபுரம் ஸ்ரீராமானந்தர் ஆராதனை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை தங்கப்பல்லக்கில் பவனி. இரவு சுவாமி அம்பாள் ரிஷபவாகன சேவை. அறிவாட்ட நாயனார் குருபூஜை. சென்னை கபாலீஸ்வரர் திருவீதியுலா.

தை 6, ஜனவரி 20, ஞாயிறு  

பெளர்ணமி. செருவாமணி கிராமம் ஆலாத்தூர் சுவாமிகள் ஆராதனை. பைம்பொழில், திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் தேரோட்டம். வடசாவித்திரி விரதம். திருநெல்வேலி டவுன் ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி தங்கப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். தஞ்சாவூர் அருள்மிகு விஜயமண்டபம் தியாகராஜர் திருக்கோயில், அருள்மிகு மேலவாசல் சுப்பிரமணியர் திருக்கோயில்களில் தைப்பூச விழா. தஞ்சாவூர் அருள்மிகு கீழசிங்க பெருமாள் திருக்கோயில் ஆண்டு விழா. திருக்கல்யாணம்.
                                                                                         
தை 7, ஜனவரி 21, திங்கள்  

பெளர்ணமி. தைப்பூசம். வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் வெள்ளி ரிஷபம். காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஒட்டிவாக்கம் திருவூரல் உற்சவம். காஞ்சி ஸ்ரீவரதர் தெப்பம். திருச்சேறை கோவை, மருதமலை, பழனி தலங்களில் தேரோட்டம். வனசங்கரி பூஜை. மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி தீபம். ஸ்ரீசேந்தனார் நாயனார் குருபூஜை.  வேளூர் ஸ்ரீபஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சென்னை சைதை காரணீஸ்வரர் இந்திரதீர்த்தம், தெப்பம்.

தை 8, ஜனவரி 22, செவ்வாய்  

பிரதமை. கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி தெப்பத் திருவிழா. சென்னை ஸ்ரீசிங்காரவேலவர் தெப்போற்சவம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் செளந்திர சபா நடனம். பழனி ஸ்ரீமுருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி.

தை 9, ஜனவரி 23, புதன்  

துவிதியை. திருமழிசையாழ்வார். கோவை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மஹா தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர்  தெப்போற்சவம் விழா. வடலூர் சித்திவளாக திருமாளிகை திருஅறை தரிசனம்.

தை 10, ஜனவரி 24, வியாழன்  

சதுர்த்தி. சங்கடஹரசதுர்த்தி. பழனி ஸ்ரீமுருகப் பெருமான் காலை தோளுக்கினியானிலும், இரவு தெப்பத் தேரிலும் பவனி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

தை 11, ஜனவரி 25, வெள்ளி  

பஞ்சமி. கரிநாள். திருவையாறு தியாகப்பிரம்ம ஆராதனை. திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

தை 12, ஜனவரி 26, சனி  

சஷ்டி. சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. உறையூர் அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில் அத்யயனோத்சவம். கும்பகோணம் அருள்மிகு ஒப்பிலியப்பன்கோயில் தெப்ப உற்சவம். கூரத்தாழ்வார் சாற்றுமறை.

தை 13, ஜனவரி 27, ஞாயிறு  

சப்தமி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை. மஹான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி.

தை 14, ஜனவரி 28, திங்கள்  


அஷ்டமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.

தை 15, ஜனவரி 29, செவ்வாய்  


நவமி. திருநீலகண்டர். தாயுமானவர் (அடியவர்). சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் ஆயிரம்நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

தை 16, ஜனவரி 30, புதன்  

தசமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. த்ரைலோக்ய கெளரி விரதம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் ஸஹஸ்ரகலசாபிஷேகம்.

தை 17, ஜனவரி 31, வியாழன்  

ஏகாதசி. சர்வ ஏகாதசி. கரிநாள். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

தை 18, பிப்ரவரி 1, வெள்ளி  

துவாதசி. சேங்காலிபுரம் ஸ்ரீமுத்தண்ணாவாள் ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் வேதவல்லித் தாயார் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

தை 19, பிப்ரவரி 2, சனி   

திரயோதசி. சனி மஹாபிரதோஷம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு ஹனுமந்த வாகனத்திலும் பவனி. மாத சிவராத்திரி.

தை 20, பிப்ரவரி 3, ஞாயிறு
 

சதுர்த்தசி. மாத சிவராத்திரி. பழுர் ஸ்ரீகோவிந்த தாமோதர சுவாமிகள் ஆராதனை. கல்லிடைக்குறிச்சி, சூரிய நாராயணர் கோயில், திருவாடுதுறை இத்தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தைலக்காப்பு உற்சவக் காட்சி.

தை 21, பிப்ரவரி 4, திங்கள்  

அமாவாசை. திருவோண விரதம்.  மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தி அருளல். மஹோதய புண்யகாலம். திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ர தீபம். அமாசோமவார பிரதட்சணம், திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர்சங்கமுக தீர்த்தவாரி.

தை 22, பிப்ரவரி 5, செவ்வாய்  

பிரதமை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு வேணுகோபாலர் திருக்கோலமாய்க் காட்சி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடி அருளல்.

தை 23, பிப்ரவரி 6, புதன்  

துவிதியை. சந்திர தரிசனம். வாசவி அக்னிப் பிரவேசம். மௌன சுவாமிகள் குரு பூஜை. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தேரோட்டம், திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. அப்பூதியடிகள் நாயனார் குரு பூஜை. வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமார சுவாமி திருவீதியுலா.  

தை 24, பிப்ரவரி 7, வியாழன்  

துவிதியை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டித் திருமஞ்சனம், இரவு குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

தை 25, பிப்ரவரி 8, வெள்ளி  

திரிதியை. சதுர்த்தி விரதம். திருமொச்சியூர் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா.  மெலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குசாம்பிகை புறப்பாடு. அஹோபிலமடம் ஸ்ரீமத் 6வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு 45வது ஆண்டு மஹாபிஷேகம், ஸ்ரீரங்கம் தெப்பத்திருநாள்.

தை 26, பிப்ரவரி 9, சனி  

சதுர்த்தி. வசந்த பஞ்சமி. கஞ்சனூர் ஹரதத்தர் ஆராதனை. சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் ஸ்ரீவடிவுடையம்மன் கோயில் ஸ்ரீகணேசர் உற்சவம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. திருநெல்வேலி ஸ்ரீசாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

தை 27, பிப்ரவரி 10, ஞாயிறு  

பஞ்சமி. சஷ்டி விரதம். கரும்பூர் கரியமாணிக்க பெருமாள் திருஅவதார உற்சவம். திருச்செந்தூர், பெருவயல், திருத்தணி இத்தலங்களில் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் செளரித் திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீசாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம். கலிக்கம்ப
நாயனார் குருபூஜை.

தை 28, பிப்ரவரி 11, திங்கள்  

சஷ்டி. சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீகூடலழகர் காலை ஆண்டாள் திருக்கோலம்.  மூர்த்தி நாயனார் குருபூஜை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளம்ய நாராயணப் பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி. திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீஆதி நவச்சிவாய மூர்த்திகள் குருபூஜை. ஸ்ரீரங்கம் கருட சேவை.

தை 29, பிப்ரவரி 12, செவ்வாய்  

சப்தமி. செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்திரரேகைக்கு காவிரியில் தீர்த்தம் கொடுத்தல். திருச்செந்தூர் சுவாமி காலை பூங்கோயில் சப்பரத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் உச்சிக் கொண்டை. கூடாரை வல்லி உற்சவம். வேளூர் கடைசி செவ்வாய் தீர்த்தம்.

தொகுப்பு: ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்