SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேரன்மகாதேவி கோயில்களில் தீர்த்தவாரி தெப்பத் திருவிழா

2019-01-11@ 14:36:39

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி விழா மற்றும் ராமசாமி கோயிலில் தெப்பத்திருவிழா நடந்தது. சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பக்தவச்சல பெருமாள் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நவநீதகிருஷ்ண சுவாமி கோயில்களில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு புனித நீராடினர்.

இதேபோல் சேரன்மகாதேவி ராமசாமி கோயிலில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு சாற்றுமுறை தீர்த்தம் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு திருவீதி உலா, இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பக்த பேரவையினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்