SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தளிநாதர் கோயிலில் வெள்ளி வேலுக்கு அன்ன பூஜை

2019-01-07@ 14:31:52

திருப்புத்தூர்: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி நேற்று வெள்ளி வேலுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. தைப்பூச விழாவையொட்டி திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு  சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்று வருகிறது. நேற்று  காலையில் சுப்பிரமணிய சுவாமிக்கும், வெள்ளி வேலுக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வெள்ளி வேலை அன்னத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயிலின் உட்பிரகாரத்தில் யோகபைரவர் சன்னதியில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் திருப்புத்தூர், தம்பிபட்டி, தென்மாபட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்நத சுமார் 5 ஆயரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருமுருகன் திருப்பேரவையினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்