SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலங்குடி சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர்கள்

2019-01-07@ 14:29:58

ஆலங்குடி: ஆலங்குடி சிவன் கோயிலில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் சிவலிங்கத்தின் மீது படர்ந்ததை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். வானுலக தேவர்களுக்கு ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தெட்சினாயனம் என  இரவு பொழுதாகவும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயணம் என பகல் பொழுதாகவும் வகுக்கபட்டுள்ளது.

இதனால் தை மாதத்தில் பகல் பொழுதிற்கு ஒளி கொடுக்க வரும் சூரியன் தனது பணியை தொடங்கும் முன் சிவலிங்கத்தின் மீது  தன் கதிர்களால் ஒளியை பாய்ச்சி சிவ பூஜை செய்வதாக வரலாறு உண்டு. இதன் அடிப்படையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இரண்டாவது குருஸ்தலமாக விளங்கும் தர்மசம்வர்தினி உடனுரை நாமபுரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தை சூரியன் தன் ஒளிக்கதிர்களால் சிவ பூஜை செய்ததை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்