SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

2019-01-07@ 14:28:45

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் உத்தராயண புண்ணியகால உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உத்தராயண புண்ணியகால உற்சவ கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தியம்மன் மேளதாளம் முழங்க  தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் உச்சரிக்க காலை 8 மணிக்கு சுவாமி சன்னதி முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர். இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10 நாட்களும் காலை, இரவு சந்திரசேகரர் மாடவீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10ம் நாளான வருகிற 15ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்