SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கல்களை அவரவர்களே தேடிக்கொள்கிறார்கள்

2019-01-03@ 16:04:07

உங்களை நீங்கள் ஒருபோதும் சாதாரணமானவர்களாகவோ, அற்பமானவர்களாகவோ எண்ணி உங்களைத் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல; நீங்கள் அற்பமானவர்கள் அல்ல; அற்புதமானவர்கள். மந்தையிலே ஏதோ ஒரு ஆடாக இருக்கும் நிலையை விட்டு விடுங்கள். மந்தையிலுள்ள ஒரு செம்மறி ஆட்டுக்கு முன்பாக ஒரு கோலை நீட்டினால் முதலில் ஒரு ஆடு தாண்டிச் செல்லும். பின்பு அதைப் பார்த்ததும் மற்ற எல்லா ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாகத் தாண்டிச் செல்ல ஆரம்பிக்கும். பின்பு அந்தக்கோலை எடுத்துவிட்டாலும் கூட அது மந்தையின் சுபாவத்தின்படி குருட்டாட்டமாய்த் தாண்டிச் சென்றுகொண்டே இருக்கும். ஏன் தாண்டுகிறோம்? எதற்காகத் தாண்டுகிறோம்? என்று அவை எண்ணிப் பார்ப்பதில்லை. இன்றைக்கு நம்மில் பலர் இப்படித்தான் ஆட்டு மந்தை சுபாவத்தோடு, செம்மறி ஆடுகளைப் போல தாவிக் கொண்டிருக்கிறோம்.

‘பாம்புக்கு முன்னால் தவளை கூத்தாடட்டும். ஆனால், பாம்பு, தவளையை விழுங்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள், என்ற பழமொழியைப்போல் நீ உயரத்தில் வாசம் செய்! ஆனால், கேவலம், உலகப்பற்று உன்னுள் வாசம் செய்யும்படி இராதே! படகு தண்ணீரில் இருக்கலாம், ஆனால் தண்ணீர் படகில் இருக்கக் கூடாது.‘‘குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை. பிறர் கூறுவதையெல்லாம் காது கொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீர் கேட்க நேரிடும். நீவிர் எத்தனை முறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகி விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் என்னால் இல்லாமல் போயிற்று. ஞானம் நெடுந்தொலைவில் உள்ளது. மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?

நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஞானத்தையும் காரண காரியங்களையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும், மதிகேடரைப் போலச் செயல் புரிதல் அறிவு கெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன். சாவை விட கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப்போல உன்னைச் சிக்க வைக்கும். உன்னைச்சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான். ஆம்! நான் ஒன்றன்பின் ஒன்றாக ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன். அவற்றால் மிகுந்த பலன் அடையவில்லை, ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத்தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத்தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை. நான் தெரிந்து கொண்டதெல்லாம் இதுவே; கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார்.

ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.’’ (சபை உரையாளர் 7: 2029) தத்துவ ஞானி பெர்னாட்ஷா சிறந்த எழுத்தாளர். நகைச்சுவையாய் புத்திக்கூர்மையோடு எழுதுவார். ஒருநாள் ஒரு சினிமா நடிகை அவருக்குக் கடிதம் எழுதினாள். உங்களுடைய அறிவு, ஞானம், எழுத்துத் திறமையெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தது. அதே நேரத்தில் நான் அழகும், இளமையும், செல்வச்செழிப்பும் உள்ளவள். நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தைகள் என்னைப்போல் அழகாகவும், உங்களைப்போல் அறிவுள்ளதாகவும் விளங்கும். ஆகவே  நாம் நம் திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டிருந்தார். அதற்கு தத்துவ ஞானி பதில் எழுதும் போது, அம்மணி, எனக்கும் பயமாக இருக்கிறது, தப்பித்தவறி குழந்தை உன்னைப்போல் அறிவும், என்னைப்போல் அழகும் உள்ளதாய் பிறந்துவிட்டால் அந்தக் குழந்தையைப்போல் பரிதாபமான குழந்தை உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாதே’’ என்று பதில் எழுதிவிட்டார்.
 
‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்