SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்க்கரைப் பொங்கல்

2019-01-02@ 16:15:24

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
காய்ந்த திராட்சை - 10
ஏலக்காய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி
 நெய் - 4 மேஜைக்கரண்டி                           

செய்முறை :

பச்சரிசியை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற  வைக்கவும்.கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையையும் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில்  ஊற்றி அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதித்து வெல்லம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து  விட்டு வெல்ல பாகை வடிகட்டிக் கொள்ளவும். குக்கரில் வேகவைத்த சாதத்துடன் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறி விட்டு அடுப்பை ஆன் செய்து சிம்மில்  வைக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையைப் போட்டு கிளறி மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலைப் போட்டு நன்கு கிளறி  கெட்டியாக ஆனதும் இறக்கி விடவும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்