SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விராலிமலை முருகன் கோயிலில் திருப்படி திருவிழா

2019-01-02@ 14:13:16

விராலிமலை: விராலிமலை முருகன் கோயிலில் திருப்புகழ், திருப்படித் திருவிழாவும்  நடைபெற்றது. அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி  வழங்கியதாக கூறப்படும் விராலிமலை முருகன் கோயிலில் நால்வர் திருவருட் சங்கப்பேரவை சார்பில் திருப்படித் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மலைமேல் முருகன் வள்ளி  தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நேற்று காலை திருப்புகழ் திருப்படித்திருவிழா துவங்கியது. முருகன் வள்ளி தெய்வானைக்கு 32 சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு வெள்ளி கவச மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். அதை தொடர்ந்து மலை அடிவாரத்தில் படி வாசலில் திருவடிப்பூஜை நடைபெற்றது.

பின்னர் பேரவையினறும் பக்தர்களும் திருவிளக்கு பூஜையும், கோமாதா பூஜையும் செய்து தோரோடும் திருவீதி வலம் வந்து அடிவாரத்தில் இருந்து ஒவ்வொரு படிக்கும் பூஜைகள் செய்து திருப்புகழ்  பாடி மலைமேல் வந்து முருகனை வழிபட்டனர். தொடரந்து முருகனுக்கு சிறப்பு மஹாதீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்