SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-12-28@ 17:55:18

டிசம்பர் 29, சனி - சப்தமி. கருட தரிசனம். அஷ்டமி பிரதட்சணம். வாலாஜா அனந்தலை தன்வந்த்ரி பீடத்தில் அஷ்டமி  யாக பூஜை. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல ஜீவ கோடிகளுக்கும் படியளந்து அருளிய லீலை.

டிசம்பர் 30, ஞாயிறு -  அஷ்டமி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

டிசம்பர் 31, திங்கள் -  சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோட்டம் திருப்புகழ் பஜனை. திருமலை திருப்பதி திருஅத்யயன உற்சவ முடிவு.

ஜனவரி 1, செவ்வாய் - ஏகாதசி. ஸ்மார்த்த ஏகாதசி. திருநெல்வேலி கெட்வெல் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமிக்கு ராஜாங்க சேவை. வாலாஜா அனந்தலை தன்வந்த்ரி பீடத்தில் ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்.

ஜனவரி 2, புதன் - துவாதசி. ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி, மத்வ ஏகாதசி, காஞ்சி ஸ்ரீமஹா பெரியவாள் ஆராதனை விழா. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. காஞ்சி  மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதிவுலா.

ஜனவரி 3, வியாழன் - திரயோதசி. மஹா பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. மதுரை செல்லத்தம்மன் இரவு குதிரை வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஜனவரி 4, வெள்ளி - மாத சிவராத்திரி. தொண்டரடிப் பொடியாழ்வார். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் பவனி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. பெரிய நம்பி திருநட்சத்திர வைபவம்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்