SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-12-21@ 17:21:28

டிசம்பர் 22, சனி  

பெளர்ணமி. ஆருத்ரா அபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி சிவகாம சுந்தரி ரதோற்சவம். இரவு ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம், குருநாதர் ஸ்ரீரங்கம் நம்மாழ்வார் மோக்ஷம். ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்ச பிராகார உற்சவம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருவாய் மொழி உற்சவம். சங்கரன்கோவில் சிவபெருமான் தேரோட்டம்.

டிசம்பர் 23, ஞாயிறு  

ஆருத்ரா தரிசனம். நடராஜர் அபிஷேகம். திரு உத்திரகோசமங்கை கூத்தபிரான் தரிசனம். திருவாலங்காடு ஸ்ரீ சிவபெருமான் ரத்தினசபா நடனம். சீர்காழி ஸ்ரீஉமாமகேஸ்வரர் உச்சிகாலத்தில் புழுகாப்பு, திருவாரூர் இடப்பாத தரிசனம். சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஸ்ரீ தியாகராஜர் 18 திருநடனம். சிதம்பரம் ஆடல் வல்லபிரான் சித்திர சபையில் சிதம்பர ரகசிய பூஜை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தாமிர சபா நடனம்.

டிசம்பர் 24, திங்கள்

பரசுராம ஜெயந்தி. ஸ்ரீரமணமஹரிஷி ஜெயந்தி. திருமலை ஸ்ரீசடகோப ராமானுஜர் பெரிய ஜீயர் ஜெயந்தி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ரெங்க மன்னார், மதுரை ஸ்ரீ கூடலழகர் ராப்பத்து உற்சவ சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

டிசம்பர் 25, செவ்வாய்   

சங்கடஹரசதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் திருவாய் மொழி திருநாள். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

டிசம்பர் 26, புதன்  

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ஸஹஸ்ரகலசாபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் ராப்பத்து உற்சவ சேவை.

டிசம்பர் 27, வியாழன்   

பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவாய்மொழி சாற்றுமுறை. மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவர குணமங்கை, ஸ்ரீவைகுண்டம் இத்தலங்களில் திருவாய்மொழி சாற்று முறை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு.

டிசம்பர் 28, வெள்ளி  

தேய்பிறை சஷ்டி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குஜாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்