தவா கிரில்டு டோஃபு
2018-12-18@ 13:58:59

என்னென்ன தேவை?
டோஃபு - 250 கிராம்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு விழுது - 1 டீஸ்பூன்,
கடலை மாவு - 1/4 கப்,
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 1/2 கப்,
கையில் கசக்கிய ஓமம் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய்த்தூள் - தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
டோஃபுவை பெரிய சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து இறக்கி ஆறவிடவும். பாத்திரத்தில் டோஃபு, கடலை மாவு கலவை, வெண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து, டோஃபு உடையாமல் கலந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு கிரில் தவாவை மிதமாக சூடு செய்து டோஃபுவை சேர்த்து தேவையான வெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்து சாட் மசாலா தூவி சூடாக பரிமாறவும்.
மேலும் செய்திகள்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
காய்கறி சாதம்
சர்க்கரைப் பொங்கல்
மிளகு சாதம்
ஆஞ்சநேயர் மிளகு வடை
மெலன் டெசர்ட்
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்