SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓமலூர் அருகே மல்லிகார்ஜூனஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

2018-12-13@ 14:16:03

ஓமலூர்:  ஓமலூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகார்ஜூன ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஓமலூர் அருகே திண்டமங்கலம் கிராமம் மயிலம்பாடி பாரதி நகரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ மல்லிகார்ஜூன ஈஸ்வரர் கோயில் உள்ளது. சிறப்பு வாய்ந்த கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு, புனரமைக்கப்பட்டது. கோயில் ராஜா கோபுரம், மண்டபம், அன்னை சன்னிதானம், விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், காலபைரவர், நவகிரக சுவாமிகள் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் நந்திக்கும், தனித்தனியாக கோயில் கட்டப்பட்டது.

இதையடுத்து மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. யாக சாலையில் இருந்து புனித நீர் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ராஜகோபுரத்தில் ஊற்றி குடமுழுக்கு விழா நடந்தது. பின்னர் அனைத்து கோபுரங்கள் மீதும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து உலக நலனிற்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், கோமாதா பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்