SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெலன் டெசர்ட்

2018-12-12@ 16:32:22

என்னென்ன தேவை?

முலாம் பழம் அல்லது கிர்ணிப்பழம் சிறியது - 1,
கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப் அல்லது தேவைக்கு,
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை,
குங்குமப்பூ - சிறிது,
அலங்கரிக்க செர்ரி பழம் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பழத்தின் தோல், விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கரைத்து வடிகட்டவும். மீண்டும் வெல்லக்கரைசலை கொதிக்க விட்டு சிறிது கெட்டியாக வந்ததும் இறக்கி கைவிடாமல் கலக்கவும். சிறிது சூடாக இருக்கும்போதே கெட்டியான தேங்காய்ப்பால், நறுக்கிய பழத்தை சேர்த்து கைவிடாமல் கலக்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து ஆறியதும், ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து செர்ரிப் பழங்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்