SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனாட்சி அம்மன் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

2018-12-04@ 14:27:39

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் (சோம  வாரம்) சிவனை வழிபாடு செய்தால் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மேலும், இந்த நாட்களில் சிவதரிசனம் செய்தால், கணவர், மனைவி இணைந்து  பிரச்னைகளை சமாளிப்பர். குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம்.

இதனடிப்படையில், சோமவாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நேற்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் தங்கக்கொடி மரம் அருகில் புனித நீர் ஊற்றப்பட்ட 1008 சங்குகள் மற்றும் புனிதநீர் குடங்கள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு, சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து அம்மன் மற்றும் சுவாமிக்கு புனித நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்