SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சானூரில் கோலாகலம் : பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்கும அர்ச்சனை

2018-12-04@ 14:25:28

திருமலை: திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் இன்று  கார்த்திகை பிரமோற்சவம்  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் காலை, இரவு என்று 2 வேளையும் பத்மாவதி தாயார் பெரிய சேஷ, சின்ன சேஷம், சிம்மம், கஜ, கருட, முத்துப்பந்தல், கற்பக விருட்சம், தங்க ரதம் உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 12ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன்  பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு நேற்று காலை 8 மணி முதல் 12 மணி வரை வேதமந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சஹஸ்ரநாமம் பூஜைகளுடன் லட்ச குங்குமார்ச்சனை செய்தனர். இதில், துணை செயல் அலுவலர் ஜான்சிராணி, உதவி செயல் அலுவலர் சுப்பிரமணியம், அர்ச்சகர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடையே பிரமோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இதில் புண்ணியாகவாசனம், ரக்க்ஷாபந்தனம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடந்தது. இன்று காலை 7 மணியளவில் கொடிமரத்திற்கு அபிஷேகமும் 8 மணி முதல் 8.30  மணிக்கு இடையே விருட்சிக லக்னத்தில் தங்க கொடிமரத்தில் பத்மாவதி தாயாரின் பிரமோற்சவ கொடியேற்றமும் நடைபெற உள்ளது. இரவு 8 மணி முதல் 11 மணிக்கு இடையே பிரமோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக சின்ன சேஷ வாகன சேவை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்