SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்த்திகை 3வது சோமவாரம் : குற்றால அருவியில் நீராடி பெண்கள் சுமங்கலி பூஜை

2018-12-04@ 14:24:55

தென்காசி: கார்த்திகை மாத திங்கள்கிழமை 3வது சோமவாரத்தை முன்னிட்டு குற்றால அருவியில் ஏராளமான பெண்கள் புனித நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவார சுமங்கலி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாதம் 3வது சோமவாரமான நேற்று, கணவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டி பெண்கள் அதிகாலையிலேயே குற்றாலம் மெயினருவியில் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜையில் பங்கேற்று திருமாங்கல்ய வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து குற்றாலநாதர் கோயில் அருகில் உள்ள கன்னிவிநாயகர் கோயில் மற்றும் செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வந்து பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். அருவியில் குளிக்க பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரையிலும், மீண்டும் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் ஆண்கள் பகுதியிலும் பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் ஆண்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மற்ற அருவிகளான பழையகுற்றால அருவி, புலியருவி, ஐந்தருவிகளில், சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்