SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனி அல்லிநகரத்தில் பெருமாள், பெருந்தேவி தாயார் திருக்கல்யாணம்

2018-12-04@ 14:22:52

தேனி: தேனி அல்லிநகரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள், பெருந்தேவி தாயார் திருக்கல்யாணம் நடந்தது. தேனி அல்லிநகரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சன்னதியில் நேற்று வருசாபிஷேகம் மற்றும் வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோயிலில் திருமஞ்சன வைபவம் நடந்தது.

நேற்று காலை வேதவிற்பன்னர்கள் முன்னிலையில் யாகபூஜை நடத்தப்பட்டு, மோகன் படடாச்சாரி தலைமையில் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.திருக்கல்யாணத்தையொட்டி பூஜை செய்யப்பட்ட மங்களநாண் பெருந்தேவி தாயார் கழுத்தில் கட்டப்பட்டது. வருசாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராமக்கமிட்டியினர் மற்றும் சடகோப ராமானுஜர் கோஷ்டியினர்  செய்தனர். இத்திருமண விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்