SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிதியை பெருக்குவார் ஆதிகேசவப் பெருமாள்

2018-11-30@ 17:27:06

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொன்னகரம். இது கடற்கரை கிராமம். இங்குதான் வெங்கடாசலபதி எழுந்தருளி உள்ளார். இவரை ஆதிகேசவப் பெருமாள் என்று அழைக்கிறார்கள். திருப்பதியில் வெங்கடாசலபதி காட்சி தருவதுபோல் இந்த ஆலயத்திலும் வெங்கடாசலபதி காட்சி தருவதால் இந்த ஆலயம் ‘‘தென் திருப்பதி’’ என்று அழைக்கப்படுகிறது. இவரை வணங்கினால் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கிய பலன் கிடைக்கும் என்பார்கள். திருப்பதியில் செலுத்த வேண்டிய காணிக்கையை இங்கு செலுத்தினால் அது திருப்பதி வெங்கடாசலபதிக்குப் போய் சேருகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

1800 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மன்னன் குலோத்துங்க சோழன், ஆதிகேசவப் பெருமாளுக்கு இப்பகுதியில் ஓர் ஆலயம் எழுப்பினான். பின்னர் அப்பகுதி மண்ணில் புதையுண்ட போது கோயிலையும் கடல் ஆட்கொண்டு விட்டது. இந்த நிலையில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடி என்பவர் நண்பர்களுடன் கடல் நடுவே படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வீசிய புயலில் நிலை தடுமாறி படகு திசைமாறிச் சென்றது. படகிலிருந்த தனுஷ்கோடி உள்ளிட்ட அவரது நண்பர்கள், உடனே தங்கள் குல தெய்வமான ஆதிகேசவப் பெருமாளை நினைத்து தங்களைக் காப்பாற்றும்படி குரல் கொடுத்தனர். அலையில் தட்டுத்தடுமாறிய படகு ஏதோ ஒரு கரையை நோக்கி நகர்ந்தது. திடீர் என்று எதன் மீதோ மோதி, நங்கூரம் பாய்ந்தது போல் நின்றது. அந்த இடம் அவர்கள் வந்து சேர வேண்டிய கிராமம்தான்.

படகைவிட்டு இறங்கிய மீனவர்கள், மண்வெட்டி, கடற்பாரையை எடுத்து வந்து படகு நின்ற இடத்தைத் தோண்டினார்கள். அங்கே ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான ஆதிகேசவப் பெருமாள் சிலை. முன்பு குலோத்துங்க சோழன் கட்டிய பெருமாள் கோயில் கடலில் மூழ்கியதல்லவா? அந்த ஆலயத்தின் மூலவர்தான் இந்த ஆதிகேசவப் பெருமாள் என்று தெரியவந்தது. தங்கள் குலதெய்வமே தங்களை காப்பாற்றியது என்று அகமகிழ்ந்தனர். அந்த இடத்திலேயே ஆதிகேசவப் பெருமாளுக்கு கொட்டகை அமைத்து வழிபட்டனர்.

கடலில் புதையுண்ட பெருமாள் கடலில் சிக்கி தத்தளிக்கும் மீனவர்களைக் காப்பாற்றவே அப்பகுதியில் எழுந்தருளியதாக மக்கள் நம்பினார்கள். திருப்பதி வெங்கடாசலபதியே ஆதிகேசவப் பெருமாளானதாகவும் இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். மணமாகாத கன்னிப் பெண்கள் இவரை வழிபட்டால் 48 நாளில் திருமணம் கைக்கூடும் என்கிறார்கள். நேரில் வந்து வேண்டுதல் செய்தால் விரைவில் வேலை கிடைக்கும். மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு மூன்று நாள் தங்கி வழிபாடு செய்தால் பிள்ளைச் செல்வம் கிடைக்கும். மூலவரின் பாதங்களில் கணக்கு நோட்டுகளை வைத்து வணங்கி தொழில் தொடங்கினால் சிறப்பாக அமையும். நிதி நிலை பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.

கோட்டாறு ஆ. கோலப்பன்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

 • iraqnewyear

  ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்