தென்காசி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
2018-11-27@ 14:07:25

தென்காசி: தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோயிலில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது. விழாவிற்கு கேந்திர தொண்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இலஞ்சி அன்னையா பாண்டியன், கேந்திர முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். கேந்திர தொண்டர் கருப்பசாமி வரவேற்றார். தெய்வானை இறைவணக்கம் பாடினார். குற்றாலம் ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்த மகராஜ் சுவாமிகள், ராமகிருஷ்ண தபோவனம் அர்ச்சரானந்த சுவாமிகள் ஆகியோர் ஆசி வழங்கினர்.
ராஜேஸ்வரி ஜூவல்லரி மகேஸ்வரி பாலசுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி ஆகியோர் திருவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கேந்திர பொறுப்பாளர்கள் ஜானகிபுஷ்பம், சந்திரா, சரஸ்வதி, முன்னாள் கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார், இசக்கிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். பூஜையில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 48 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பூஜைகளை நடத்தினர். கோமதிநாயகம் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
வத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது
மீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது
சேத்தூரில் பூக்குழி திருவிழா
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது