SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ, குங்கும அர்ச்சனை தொடங்கியது

2018-11-27@ 14:06:42

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ, குங்கும அர்ச்சனை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் லட்சு வில்வ அர்ச்சனை மற்றும் லட்ச குங்கும அர்ச்சனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கார்த்திகை மாதத்தையொட்டி நேற்று முதல் வருகிற டிசம்பர் 5ம் தேதி வரை ஸ்ரீகாளத்தீஸ்வரருக்கும் ஞானபிரசூனாம்பிகை தாயாருக்கும் லட்ச வில்வ அர்ச்சனை மற்றும் லட்ச குங்குமார்ச்சனை நடைபெற உள்ளது.

இதையொட்டி நேற்று காலை நடந்த மூன்றாம் கால அபிஷேகத்திற்கு பிறகும் மாலை நான்காம் கால அபிஷேகத்திற்கு பிறகும் அலங்கார மண்டபத்தில் லட்ச வில்வ மற்றும் லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது. இதேபோல் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தையொட்டி நேற்று கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ காளத்தீஸ்வரரையும், ஞானபிரசூனாம்பிகை தாயாரையும் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதி முன் நெய் விளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்