பளியன்குடி கண்ணகி கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை
2018-11-27@ 14:05:40

கூடலூர்: கூடலூர் அருகே பளியன்குடி கண்ணகி கோயிலில் லட்சுமி விநாயகர் சிலை பிரதிஷ்டை நேற்று நடந்தது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரப்பகுதியில் கண்ணகி கோயில் உள்ளது. இதன் வளாகத்தில் பேச்சி அம்மன், வெற்றிவேல் முருகன், ராக்காச்சி அம்மன் சிலைகள் உள்ளன. தற்போது புதிதாக லட்சுமி விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு புனித நீர் தெளித்து பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக, பூசாரி கந்தவேல் நவரிஷி தலைமையில் அதிகாலை முதல் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றது. பிரதிஷ்டை நிகழ்ச்சியை ஒட்டி பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோயில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கண்ணகி கோயில் விழா கமிட்டியை சேர்ந்த கார்த்திகேயன், முத்தையா, ராஜேஸ்வரன் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்
சேரன்மகாதேவி வெங்கடாசலபதி கோயிலில் ரத சப்தமி தீர்த்தவாரி
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரர் தீர்த்தவாரி
கருணைமிகு கருடாழ்வார்
திருப்பாலீஸ்வரர் கோயிலில் முற்றோதுதல் விழா
திருவண்ணாமலையில் நடராஜ பெருமானை தலையில் சுமந்து கிரிவலம் வந்த அடியார்கள்
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்