திருச்செந்தூரில் துளசி கல்யாண உற்சவம்
2018-11-27@ 14:00:02

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஹரே கிருஷ்ண அறக்கட்டளை சார்பாக துளசி கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இதையொட்டி அமெரிக்க இஸ்க்கான் பக்தர் வைபவ், .கார்த்திக் ஹரி நாம சங்கீர்த்தனம், வேத நாராயணதாசனின் சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து தச்சநல்லூர் பலபத்திரதாசன் ஹோமத்தை தொடர்ந்து மாங்கல்ய தாரணம் தீபாரதனை நடந்தது. பின்னர் உற்சவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துளசி கன்று, துளசி பிரார்த்தனை அட்டை, தாலிக்கயிறு மற்றும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், திருமணம் முடியாதவர்களின் ஜாதக குறிப்பை பக்தர்கள் துளசி பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்துச்சென்றனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருச்செந்தூர் ஹரே கிருஷ்ண அறக்கட்டளை சேவகர்கள் செய்திருந்தனர்.
துளசி கல்யாணத்தின் சிறப்பு குறித்து ஹரே கிருஷ்ண அறக்கட்டளை தலைவர் வேதநாராயணதாசன் கூறுகையில், ‘‘துளசி கல்யாணத்தின் பெருமையை “ப்ருத ஸ்தோத்திர ரத் தினாகரம்” கீழ்கண்டவாறு கூறுகிறது. “துளசி கல்யாணத்தில் கலந்து கொள்பவர் தனது இப்பிறவி மற்றும் முற்பிறவிகளின் பாவங்களிலிருந்து விடுபடுகிறார். துளசி கல்யாணத்தை பார்ப்பவரோ, கேட்பவரோ கூட அதே பலனை அடைகின்றனர்”. துளசி பூஜையால் பல யாகங் களையும் விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். துளசி செடி நிற்கின்ற இடத்தில் பூதங்கள், பிசாசுகள், ராக்ஷசர்களின் சேட் டைகளும், எமகணங்களின் பயமும், பிரம்மஹத்தி முதலிய தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்