SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

2018-11-08@ 15:37:49

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்திபெற்ற கந்த சஷ்டி திருவிழா இன்று காலை துவங்கியது. வரும் 13ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைமுன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் துவங்கினர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா இன்று (8ம் தேதி) துவங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 6 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். பின்னர் கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூஜை துவங்கியது.  

யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு மேல் சாயரட்சை தீபாராதனைக்கு பிறகு மற்ற கால பூஜைகள் நடைபெறும். விழாவின் சிகரமான சூரம்சம்ஹாரம் வரும் 13ம் தேதி மாலையில் கடற்கரையில் நடக்கிறது. மறுநாள் (14ம் தேதி)  அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசுக் காட்சிக்கு புறப்படுதல் நடைபெறும்.

மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளலும், மாலை 6.30 மணிக்கு தெற்கு ரத வீதி, மேலரத வீதி சந்திப்பு பகுதியில் மாலை மாற்று விழா நடக்கிறது. இரவு சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கந்த சஷ்டி துவக்க நாளான இன்றே தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும்  வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, திருக்கோயில் உள் மற்றும் வெளி பிரகாரங்கள், விடுதிகளில் தங்கி விரதம் துவங்கினர். பக்தர்கள் வசதிக்காக தற்காலிக தங்கும் அறைகள், பிரகாரத்தைச் சுற்றிலும் தற்காலிக மேற்கூரை, கழிவறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்